மணமக்களுக்கு தக்காளி பரிசு - விஜய் ரசிகர்களின் செயல் வைரல்!
கோயம்புத்தூர்: குறிச்சி பிரிவில் மகேஷ்வரன் என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவர்கள் தக்காளி விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு தக்காளியைப் பரிசாக வழங்கினர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.