நலிவுற்ற தியேட்டர் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய விஜய் ரசிகர்கள்! - விஜய் ரசிகர்கள்
பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தை முன்னிட்டு திருவெல்வேலியில் ரசிகர்கள் கட்அவுட், பேனர்களை தவிர்த்து, கரோனா காலத்தில் ஊதியம் இன்றி நலிவுற்ற தியேட்டர் ஊழியர்களுக்கு ரூபாய் 1000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி கொண்டாடினர். நெல்லை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.