மதுரையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது! - போஸ்டர் ஒட்டியதாக மதுரை மாவட்ட விஜய் ரசிகர் கைது
மதுரை : செல்லூர் பகுதியில் விஜய் ரசிகர் மன்றத்தலைவர் தங்கபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக, மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விஜய் ரசிகரான ஜெயகார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர்.