பள்ளி மாணவர்களிடையே மோதல்: வைரலாகும் காணொலி - பள்ளி மாணவர்கள்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில், அரசு உதவி பெறும் பள்ளிகளான ஆறுமுக நாவலர் - ராமசாமி செட்டியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், நேற்று (அக்டோபர் 13) பள்ளி முடிந்து தங்கள் பகுதிகளுக்குச் செல்வதற்கு, பேருந்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர். அப்போது பேருந்தின் படியில் யார் தொங்குவது என இருதரப்பு மாணவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் காட்சி காணொலியாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.