வேலூர் சேர்க்காடு ஏரி நிரம்பியது! - காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு ஏரி
வேலூர்: கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில் காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு ஏரி நிரம்பி வெள்ள நீர் சேர்க்காடு, கிருஷ்ணகவுண்டனூர் கிராமங்களை சூழ்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் வெளியேறமுடியாமல் தவித்து வருகின்றனர். கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.