ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த மக்கள்: வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல்துறை! - police seize vehicles of people roaming in lockdown
கடலூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (மே.24) முதல் முழு ஊரடங்கு அமலுக்குவரும் நிலையில், முக்கியச் சாலைகளான பாரதி சாலை, நேதாஜி ரோடு, லாரன்ஸ் ரோடு உள்பட பல்வேறு சாலைகளில் காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், லாரன்ஸ் சாலையில் காவல்துறையினர் சோதனையின்போது, விதிமுறைகளை மீறிச் சென்ற 100க்கும் மேற்பட்டோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.