சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகையில் வாகன பேரணி - நாகை பேரணி
32ஆவது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நாகையில் இன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் நடைபெற்ற நான்கு சக்கர வாகன பேரணியை மாவட்ட நீதிபதி செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.