கொடைக்கானலில் காய்கறி விலை உயர்வு - கொடைக்கானலில் காய்கறி விலை உயர்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வந்த வாரச்சந்தையில் காய்கறிகள் மிக குறைந்த விலையில் விற்கப்பட்டன. இந்தச் சந்தை கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாரச்சந்தை இல்லாததால் கொடைக்கானல் நகர்ப்பகுதி முழுவதும் இருக்கக்கூடிய காய்கறி கடைகளில் காய்கறிகள் விலை அதிகமாக விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.