முழு ஊரடங்கு: காய்கறிகள் விலை திடீர் விலையேற்றம்! - காய்கறி மற்றும் பழங்கள் பற்றாக்குறை
முழு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக, காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விலை 30 முதல் 40 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பஜார் பகுதி, அரண்மனை, வண்டிகாரன் சாலை, பாரதி நகர் கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில், காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். விலையேற்றம் மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.