வடஇந்தியப் பெண்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து பரப்புரையில் ஈடுபடுத்திய வானதி - NAMMA VOTEU Thamaraikkae
கோயம்புத்தூர் தெற்குத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன். பல ஆண்டுகளாக கோவையில் பூ மார்க்கெட், சுக்ரவார்பேட் ஆகிய பகுதியில் வசித்துவரும் வட இந்தியர்களின் வாக்குகளைப் பெற, அம்மக்களை வைத்தே கேன்வாஸ் செய்து, பாஜகவுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வானதி சீனிவாசன் வட இந்தியப் பெண்களுக்கு தமிழ் பயிற்றுவித்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.