இரட்டை வேடம் போடும் திமுக - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு - covai latest news
நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்வு குறித்து காணொலி ஒன்றை கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வை மாநில அரசுகள் தடுக்க இயலாது என்று தெரிந்தும் கூட அதை ரத்து செய்வோம் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்து மாணவர்களை ஏமாற்றியுள்ளார்கள் என கூறியுள்ளார்.