வாடாமல்லி பூ விலை சரிவு – விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் கிராமப் பகுதிகளில் அதிகளவில் வாடாமல்லி பூ சாகுபடி செய்யப்படுகின்றன. ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாடாமல்லி பூ அதிகளவில் திண்டுக்கல் பூ சந்தைக்கு வருகிறது. இதனால் வாடாமல்லி பூவின் விலை குறைந்துள்ளது. இதுவரை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்பட்ட பூ தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் செய்வதால் விலை சரிந்துள்ளது என விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.