தனித்துவமான மீன்பண்ணையை உருவாக்கிய இளைஞர் - உருவாக்கம்
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த பிலால் அகமது கான் என்ற இளைஞர் அப்பகுதியிலுள்ள குளத்தை தனித்துவமான மீன்பண்ணையாக உருமாற்றியுள்ளார். 40 வயதான பிலால், 2007ஆம் ஆண்டில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். வேலைக்கு தவித்துவந்த இவர் ஒரு கட்டத்தில் தனது மனைவியின் துணையுடன் இந்த மீன் பண்ணையைத் தொடங்கி நடத்தி வருகிறார்.