மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு! - மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா
தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சா் மான்சுக் மாண்டவியா டெல்லியிலிருந்து சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.