டாஸ்மாக்கில் 'குடி'மகள்கள்: வைரலாகும் காணொலி - Tirupur District News
திருப்பூர்: கரோனா ஊடரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. அதனால் மதுபாட்டில்கள் வாங்க ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வரிசையில் நின்று வாங்கிச் செல்வது இயல்பாக மாறிவருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள டாஸ்மாக் ஒன்றில் இரண்டு பெண்கள் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு வேகமாக ஓடிச் செல்கின்றனர். அது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.