இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
சிவகங்கை மாவட்டம் உடையநாதபுரத்தை சேர்ந்தவர்கள் நாகராஜன், மணிமேகலை தம்பதி. திம்மநல்லூர் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. தம்பதியும் சின்னையாவும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் குட்டூர் பேருந்து நிலையம் எதிரே வந்துள்ளனர். அப்போது தவறான பாதையில் வந்த சின்னையா, நாகராஜன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதினார். இந்த விபத்தில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.