Mist in Trichy RockFort: திருச்சியில் மறைந்து போன மலைக்கோட்டை - தமிழ்நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு
திருச்சி:Mist in Trichy RockFort:திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் பெருமை வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் ஒன்று. திருச்சிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் மனம்கவர்ந்த பொழுதுபோக்கு தலமாகவும் இது விளங்குகிறது. கடந்த இருநாட்களாக நடைபயணம் மேற்கொண்டு வருபவர்கள் மலைக்கோட்டையைக் காணாமல் சற்றே திகைத்துப்போகிறார்கள். காரணம், பனி மூட்டம். இந்த சூழலியல் மாற்றம் குறித்து, பால்ய காலம் முதல் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் இருவரிடம் பேச்சு கொடுத்தோம். இனி, அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை உங்களுக்காக.