அரசின் அலட்சியத்தால் அல்லல்படும் மலைவாழ் மக்கள்! - ராசி மலை வனக்கிராம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மஞ்சளாறு அணைப் பகுதி அருகே உள்ளது ராசி மலை வனக்கிராமம். இந்தக் கிராமத்தில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்ததால் தமிழ்நாடு அரசு புதிய வீடுகள் கட்டித்தருவதாகக் கூறி அந்த வீடுகளை இடித்தது. எனினும் தற்போது வரை புதிய வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காததால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மலை அடிவாரத்தில் குடிசைகள் அமைத்து வாழ்ந்துவருகின்றனர்.