கொடைக்கானலில் கனமழை: வீட்டின் மேல் மரம் சாய்ந்து விபத்து - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்
திண்டுக்கல்: கொடைக்கானலில் டாக்டே புயல் காரணமாக நேற்று (மே.14) இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.15) காலை பெய்த மழையின் காரணமாக சேரன்நகர் பகுதியில் உள்ள ஜெகதீசன் என்பவரது வீட்டின் மேல் மரம் சாய்ந்தது. இதில் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினர் மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.