பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு! - நெடுஞ்சாலையில் சாய்ந்த புளியமரம்
பெரம்பலூர்: நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் புளியமரம் சாய்ந்தது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து காவல் பிரிவினர் சாய்ந்த புளிய மரத்தை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.