நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் சார்பில் டிராக்டர் பேரணி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டனர். ஆனால், டிராக்டர் பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினால், அவர்களை கட்டுப்படுத்துவது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் சார்பில் டிராக்டர் பேரணி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.