ஞாயிறு விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - ஒகேனக்கல் தொடர்பான செய்திகள்
தருமபுரி: ஞாயிறு விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லில் இன்று (நவ.,8) சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை புரிந்து வருகின்றனர். ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகளை பரிசல் மூலம் பார்வையிட்டனர். ஒகேனக்கல்லின் இன்றைய நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாகும்.