தீபாவளி விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - diwali in hogenakkal
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சியில், பரிசல் பயணம், எண்ணெய் குளியல், மசாஜ், அசைவ உணவுகள் ஆகியவை பெயர் பெற்றவை.