கொடிவேரி அணைக்கட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - erode district news
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக கொடிவேரி அணைக்கட்டு உள்ளது. அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதால், ரூ.8 கோடி செலவில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அப்பணிகள் முழுமையடைந்தன. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கட்டில் குளித்து மகிழ்ந்தனர்.