பவானிசாகர் அணை பூங்காவில் அதிகரித்துவரும் சுற்றுலாப் பயணிகள்! - Bhavanisagar Dam Children's Park
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைப்பூங்காவில் நேற்று (டிச. 20) மட்டும் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தனர். பூங்காவில் உள்ள புல் தரைகளில் அமர்ந்தபடி உணவு அருந்திய சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல் சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். முதியோர்கள் சில்லென காற்றை சுவாதித்து இளைப்பாறி மகிழ்ந்தனர். குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.