குன்னூருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை நிரம்பியது! - nilgiri district coonoor
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் இருந்து 8 கி.மீ. தூரத்தல் பந்துமி என்ற அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது ரேலியா அணை. இந்த அணை நீலகிரி மக்களின் நீர் ஆதாரமாக இருந்துவருகிறது. இந்த அணை 43.5 அடி கொள்ளளவு கொண்டது. வறட்சி காலங்களில் தண்ணீர் அளவு 10 அடிக்கும் கீழ் குறைந்தது. தற்போது, வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்துவருகிறது. இதனால், ரேலியா அணை 41 அடி உயர்ந்து மழை தொடரும்பட்சத்தில் முழுக் கொள்ளளவை எட்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தனர்.