விழுப்புரத்தில் பற்றி எரிந்த லாரி: 25 லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் நாசம்! - villupuram news
திருப்பூரிலிருந்து கொல்கத்தாவிற்கு துணிலோடு ஏற்றிச்சென்ற லாரி விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி வி.சாலை என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பக்க டயரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பற்றி எரிந்த தீயால், லாரியிலிருந்த 25 லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. இந்த லாரி தீ விபத்து காரணமாக விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடும் வெயில் காரணமாக இந்தத் தீ விபத்து நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.