மயிலாடுதுறையில் தீர்த்தவாரி உற்சவம் : கரோனாவால் பக்தர்கள் வருகை குறைவு - Mayiladuthurai district news
மயிலாடுதுறை : காவிரியில் நீராடுதல் மாவட்டத்தில் நடைபெறும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் துலாக்கட்ட காவிரியில் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி ஒன்றாம் நாளான இன்று (அக.17) துலாக்கட்ட காவிரியில் அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடிச் செல்கின்றனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூடுவதைத் தடுக்க தென்கரை படித்துறை பகுதி பூட்டப்பட்டுள்ளது. அங்குள்ள கோயிலில் விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், முதல் நாள் தீர்த்தவாரியில் ஆலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.