அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றியவர்கள்; உறுதிமொழி எடுக்க வைத்த காவல் துறை - pledge of corona
திருப்பூர்: அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியில் சுற்றும் பொதுமக்களை சாலையில் வரையப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு ஓவியத்தின் முன்பு நிற்கவைத்து காவல் துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்தனர். அதில் அவர்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுத்த மாட்டோம், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வெளியில் வருவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.