நான்கு புறமும் புதுச்சேரி எல்லை... நடுவில் வசதிகளின்றி தவிக்கும் தமிழக கிராமம் - நான்கு புறமும் புதுச்சேரி எல்லை
திருவாரூர்: நன்னிலம் வட்டத்திற்கு உள்பட்ட கரைகண்டம் கிராமத்தில், நான்கு புறமும் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதி சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தீவு போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அடிப்படை வசதிகளைக் கூடிய விரைவில் செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.