திருவாரூர் மாவட்டத்தில் கோடை மழை - விவசாயிகள் மகிழ்ச்சி - Summer rain in Thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்துவருகிறது. இந்த வெப்பத்தை தணிக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தக் கோடை மழையால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.