திருவண்ணாமலையில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை - Thiruvannamalai Summer Heavy Rain
கோடை வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் திருவண்ணாமலை நகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேடியப்பனூர், வேங்கிக்கால், நல்லவன்பாளையம், பெரும்பாக்கம், கீழ்நாச்சிபட்டு உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை கருமேகம் சூழ்ந்து சூறாவளி காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.