திருவள்ளூரில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மாலை நேரங்களில் புதுவாயல், ஆரணி, கொசவன்பேட்டை, பணப்பாக்கம், பெரியபாளையம், அகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.