கனமழை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வெள்ளம்! - மேற்கு தொடர்ச்சிமலை திருமூர்த்திமலை
திருப்பூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரம், பாலாற்றின் கரையில் உள்ள பிரசித்திப் பெற்ற திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கரையில் உள்ள இந்தக் கோயில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. தற்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.