35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை - பூண்டி அணையிலிருந்து நீர் திறப்பு
திருவள்ளூர்: பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகமானதால், விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகமாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக உயர்த்தி திறக்கப்படும். எனவே கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம் , ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு ,கோர தண்டலம், சோமதேவர் ,மெய்யூர் ,வெளியூர், தாமரைபாக்கம், திருகண்டலம், ஆத்தூர், பண்டிகவநூர், ஜெகநாதபுரம், புதுப்பாளையம், பசுபதிபாளையம், மடியூர் சீமபுரம், வெள்ளி வாய் சாவடிப்பாளையம், இடையஞ்சாவடி ,மணலி ,மணலி புதுநகர், சடயங்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையில் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்