129ஆம் ஆண்டு தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்! - Mayiladuthurai Cauvery Karai
மயிலாடுதுறை காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை தெய்வமாகப் பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் கோயிலில் சிலைவைத்து, பொதுமக்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி நடந்த 129ஆம் ஆண்டு திருவிழாவில், தீமிதி உற்சவத்தில், விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.