கோயில் கருவறை பூட்டை உடைத்த கொள்ளையர்; சிசிடிவியில் சிக்கினார்! - காவல்துறை
மணப்பாறையில், திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு காலை பூஜை செய்வதற்காக குருக்கள் வந்த நிலையில் கருவறை கதவின் பூட்டு, பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சி ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பொருட்களை திருடுவது பதிவாகியிருந்தது. இதுகுறித்து, காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Sep 10, 2019, 7:39 PM IST