விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை: கிராம மக்கள் ஆவேசம்! - ஒற்றை காட்டு யானயை விடிய விடிய விரட்டிய கிராம மக்கள்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே காவலூர் வனப்பகுதி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வனப்பகுதி தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு ஒற்றை யானை வர தொடங்கியுள்ளது. கிராம மக்கள் அதை கிராமத்திற்குள் நுழையவிடாமல் பட்டாசு வெடித்து வனத்துக்குள் விரட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க கிராம மக்களும், வன ஆர்வலர்களும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.