மலையை அழகாக்கிய வானவில் காட்சி - கண்டு ரசித்த மக்கள்! - The rainbow that appeared in the forest near Satyamangalam
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் வனப்பகுதி அழகாகக் காட்சியளிக்கிறது. வனப்பகுதியில் உள்ள மலையை ஒட்டிய பகுதியில் மேகத்திற்கும் மலைக்கும் நடுவில் வானவில் இன்று காலை தோன்றியது. ஒரு பக்கம் சூரியன் எழ மறுபக்கம் வானவில் தோன்ற இரு காட்சிகளும் இயற்கையை ரசிப்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாய் அமைந்திருந்தது. இந்த காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.