இரவில் வலம் வரும் சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்! - வனத்துறையினர் கண்காணிப்பு
கோயம்புத்தூர்: வால்பாறை நகர்புற பகுதியான வாழைத்தோட்டம், கக்கன் காலனி, துளசி நகர் போன்ற இடங்கள் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகும். இந்நிலையில், வாழைத்தோட்டம் பகுதி தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேறிய மூன்று வயதுடைய சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வருவதைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் சிறுத்தையை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், வனத்துறையினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.