குளத்தைத் தூர்வாரிய காவலர்கள்; பொதுமக்களிடையே குவியும் பாராட்டுகள்! - Crowds of applause in public!
தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் குடிமராமத்து பணிகளில் குளங்கள் மற்றும் ஏரிகளைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் அருகே சீலப்பாடி கிராமத்தில் உள்ள பால குருவப்ப நாயக்கர் குளம் என்ற 4.913 ஹெக்டேர் பரப்பளவு குளத்தின் குடி மராமத்து பணிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின் காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குளத்தைத் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர்.