சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய நீலகிரி மலர் பூங்கா! - கரோனா பாதிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இந்தாண்டு கோடை சீசனுக்காக, 1.70 லட்சம் மலர் நாற்றுகள் கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்டன. பூங்கா முழுவதும் சால்வியா, மேரிகோல்டு, ஆஸ்டர், பிளாக்ஸ், டயான்தஸ், சூரிய காந்தி உள்ளிட்ட முப்பது வகையான மலர்கள், தற்போது பூத்து குலுங்குகின்றன. தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால் மலர் பூங்காவை ரசிப்பதற்கு ஆளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.