மின்கம்பத்தில் திடீரென பற்றி எரிந்த தீ! - Namakkal District News
நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலையில் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் நேற்று (செ.15) மாலை திடீரென ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின் துறையினர் அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனர். அதன் பின் தீயணைப்புத் துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.