துணியைப் பிழிந்துகொடுத்து வாக்குசேகரித்த திமுக வேட்பாளர் - பரமக்குடி தொகுதி 2021
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முருகேசன் இன்று (ஏப்ரல் 02) பரமக்குடி நகர் பகுதி முழுவதிலும் தனது ஆதரவாளர்களுடன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது சலவைத் தொழிலாளர்களின் குடியிருப்புக்குச் சென்ற அவர், அங்கே துணி துவைத்துக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் துணியை வாங்கி, பிழிந்து கொடுத்து, வாக்கு சேகரித்தார். இந்தச் சம்பவம் வாக்காளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.