பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு முதலமைச்சர் மரியாதை! - Chief Minister Edappadi Palanichamy
1959-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து மரக்கன்றை நட்டு வைத்தனர். முதலமைச்சர் காவலர்கள் நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.