திருப்பூரில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்! - திருப்பூர் செய்திகள்
திருப்பூர்: கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் இடைத்தரகரான சதீஷ் என்பவர், இன்று வாடிக்கையாளர் ஒருவரின் காரை திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதைக் கண்ட அவர், அதிலிருந்து இறங்கி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து கார் முழுவதும் மளமளவென தீ பரவியது.