அரியர் ஆல்-பாஸ் பண்ணவச்சதுக்கு நன்றி ஐயா! - Aryan Students All Pass
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பாஸ் என அறிவித்தார். இதனால் அரியர் மாணவர்கள் சமூக வலைதளங்களில் பழனிசாமியை வெகுவாகப் பாராட்டி போஸ்டர்கள் மீம்ஸ்கள் எனப் பல்வேறு வகையில் புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் நேற்று (செப். 07) திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூந்தமல்லி காட்டுப்பாக்காம் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நசரத்பேட்டை சந்திப்பு அருகே முதலமைச்சரின் வாகனம் வரும்போது அங்கிருந்த மாணவர்கள், "அரியர் தேர்வு பாஸ் பண்ணவைத்ததற்கு நன்றி ஐயா" எனக் கூறினார். இதற்கு புன் சிரிப்புடன் மாணவர்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டே சென்றார் எடப்பாடி பழனிசாமி. தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.