திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி! - தங்கம் தென்னரசு வெற்றி
கடந்த 1998ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ.வானார். பின்னர் 2006 தேர்தலில் அருப்புக்கோட்டையில் மீண்டும் வென்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அருப்புக்கோட்டையில் மூன்று முறையும், திருச்சுழியில் இரண்டு முறையும் களமிறங்கிய தங்கம் தென்னரசு இந்தமுறையும் திருச்சுழியில் களமிறங்கி வென்றிருக்கிறார். இதன்மூலம் அவர் சட்டப்பேரவைக்குள் தொடர்ச்சியாக நான்காவது முறை எம்.எல்.ஏ.வாக நுழைகிறார்.