வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி தரிசனம்! - Cuddalore district news
கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 150ஆவது தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (ஜன.28) ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.