நீரிழிவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பேரணி! - நீரிழிவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய பேரணி திருநெல்வேலி
திருநெல்வேலி: தென்காசியில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் மாணவர்களின் பேரணி நடைபெற்றது. பேரணியை காவல் ஆய்வாளர் ஆடிவேல் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.